அரசு நடுநிலை பள்ளி அமரதனுர்
  • உயரிய ஒழுக்கம் !

சிறப்பம்சங்கள்

பள்ளியின் சிறப்பம்சங்கள்
  • இந்தப் பள்ளி 1957- ல் போலீஸ் சிரமத்தான தின் மூலம் உள்நாட்டு அமைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்களால் திறக்கப்பட்டு தற்போது 60 ஆண்டுகள் ஆகிறது
  • ரூ - 3 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
  • jsw மூலம் ரூ - 7 லட்சம் செலவில் நவீன கழிப்பட வசதி
  • Cape - Gemini நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட நவீன கணினி ஆய்வகம்
  • JSW நிறுவனம் மூலம் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை
  • மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் பயிற்சி
  • JSW & ISHA மூலம் 2ஆசிரியர்களை நியமனம் செய்து கடைநிலை மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி மேலும் ஊக்குவித்து கல்வி தேர்ச்சி பெற செய்தல் .
  • நமது பள்ளி மாவட்ட அளவில் சிறந்த கிராமக்கல்வி குழுவிற்கான விருதை மாவட்ட ஆட்சித்தலைவரிடமிருந்து பெறப்பட்டது
  • ஆண்டிற்கு 3 முறை வெவ்வேறு ஒன்றியங்களிலிருந்து 3 AEEO குழுவினர் வருகைதந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஆய்வு செய்கின்றனர்.
  • P.T.A மூலமும் மாணவர்களை 5 தர நிலைகளாக பிரித்து ஆய்வு செய்யப்படுகிறது .
  • மாணவர்களின் தனித்திறன் மேம்பட பள்ளி ஆண்டு விழா.
  • கலாச்சார பண்பாடு வளர பொங்கல் விழா.
  • பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகிறது .
  • தனியார் பள்ளியிலிருந்து வந்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் சேருவதற்கு பெற்றோர்கள் உறுதி தந்துள்ளனர் .
  • மாணவர்களின் தன் சுத்தம் , சத்துணவு சுகாதாரம் குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது
  • தனியார் பள்ளியில் கிடைக்காத 25% இட ஒதுக்கீட்டிற்கு போராடுவதை தவிர்த்துவிட்டு நம் அரசு பள்ளியில் அனைவருக்கும் கிடைக்கும் 100% இட ஒதிக்கீட்டிற்கு மாணவர்களை சேர்ப்பீர் !ஆதரவு தாரீர் .
  • அமரத்தானூரில் புதியதாக அமைந்துள்ள கிரிக்கெட் அகாடமியில் அமரத்தானூர் பள்ளியில் தற்போது பயிலும் மாணவ - மாணவிகளுக்கு 50% குறைந்த கட்டணத்தில் கிரிக்கெட் பயிற்சி தரப்படும் .
  • பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நடன பயிற்சி வாரம் இரு நாட்கள் நடத்தப்படும் . நமது பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துகளை அனுப்பியுள்ளோம். இலவச வேன் வசதி உள்ளது .
  • பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் திரு B .வெங்கடேஷ் - திருமதி . V.ராஜேஸ்வரி ,நந்தினி , சிவகாசி பட்டாசு பஜார் மற்றும் சேலம் இவர்களால் அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் சீருடை ,ஷு ,பெல்ட் ,ஐடி கார்டு ,பேக் போன்றவை அன்பளிப்பாக தரப்பட்டது .
  • SSA திட்டத்தின் கீழ் 3 வகுப்பறை கட்டடம் தரமாக கட்டப்பட்டு மீதி நின்ற தொகையை பள்ளியின் வளர்ச்சிகாக செய்து வருகிறோம் .
  • பள்ளியின் வகுப்புகள் அனைத்தும் பெயிண்ட் மற்றும் டைல்ஸ் வேலைகள் செய்ய JSW மூலம் ரூ 5 லட்சம் செலவு செய்யப்பட்டது .
  • பள்ளியில் கழிப்பட வசதி புதிப்பித்தல் செய்ய JSW மேலும் ரூ 15 லட்சம் செலவு செய்யப்பட்டது.
மாணவர்களின் சாதனை :
  • ஓவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு (Talent test) நடத்தப்பட்டு மாணவர்கள் உதவித்தொகை பெற்றுவருகின்றனர் .
  • Inspire Award அறிவியல் கண்காட்சி நமது பள்ளி மாணவர்கள் பரிசு பெற்று வருகின்றனர் .
  • CRC அளவில் நடைபெற்ற இளம் அறிவியல் விஞ்ஞானிகள் போட்டிகள் நமது பள்ளி 5 -ஆம் வகுப்பு மாணவி மன்னாதனூரை சேர்ந்த k. நதியா முதல் பரிசு பெற்றுள்ளார் .
  • நமது பள்ளி 5 -ஆம் வகுப்பு மாணவி மன்னாதனூரை சேர்ந்த k. நதியா முதல் பரிசு திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறி பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார் .
  • சுதந்திர தின விழாவில் JSW நிறுவனம் மூலம் நடத்தப்படும் March Past போட்டியில் தொடர்ந்து நம் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.
  • நமது பள்ளி மாணவன் S. சிவா சதுரங்கப்போட்டில் ஒன்றிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.





A.T. ஜெயந்தி M.A., B.Ed.,
தலைமை ஆசிரியை
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அமரத்தானூர்
ஆசிரியை மற்றும் ஆசிரியைகள்
சத்துணவு பணியாளர்கள் மற்றும்
அங்கன்வாடி பணியாளர்கள்
தொலைபேசி : (+91) 7402721082

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.