அரசு நடுநிலை பள்ளி அமரதனுர்
  • உயரிய ஒழுக்கம் !

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - அமரத்தானூர்
பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
நாள் : 28.06.2019

தீர்மானம் :

28.06.2019 நாள் அன்று நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ,

தூய குடிநீர் ,இலவச வேன்வசதி மற்றும் சீருடை ,ஷு ,பெல்ட் ,ஐடி கார்டு ,பேக் மற்றும் தீவிர மாணவர் சேர்க்கையின் மூலம் மாணவர்களின் வருகையை அதிகப்படுத்தியதற்கும் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்களை சேர்த்த பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். .

சென்ற ஆண்டு முதலில் எங்கள் பள்ளியில் L.K.G ஆரம்பிக்க அழைப்புதல் போடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. பின் அரசாங்கமே அதை தொடக்கியதிற்கு P.T.A மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது .

பள்ளியின் வளச்சிக்கு உதவிய அனைவருக்கும் கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், P T O.

எங்கள் பள்ளியில் இந்த வருடம் Website (இணையதள) செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
[ http://govtmiddleschoolamarathanoor.com]

2018 - 2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மூலம் பள்ளிக்கு செய்த சிறப்பு செயல்பாடுகள்

பெற்றோர் ஆசிரியக் குழுவின் தலைவரான திருமிகு. மே. சீ. இராஜா. முன்னாள் சேர்மன் அவர்களின் சீரிய முயற்சியால் இப்பள்ளியானது தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

2018-2022 ம் கல்வி ஆண்டு முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.


ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து 75 மாணவர்கள் இருந்த நிலை மாறி தற்போது 225 மாணவர்கள் என்ற இலக்கை அடைந்துள்ளதுடன் மேலும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜே.எஸ். டப்யூ நிறுவனத்தின் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜே.எஸ். டப்யூ நிறுவனத்தின் உதவியுடன் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மலர் : பருவ இதழ் மூன்று முறை : பள்ளி அளவில் போட்டிகள், வட்டார அளவில் போட்டிகள் அறிவியல் , கலை இலக்கிய விழா , விளையாட்டு விழா , விளையாட்டு போட்டிகள் இடம் பெறும் , மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு - ஆன பருவ இதழ் .

மாணவர்கள் , சதுரங்கம் , சிலம்பம் ,பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி - களில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.(குறு வட்டார அளவில் )

ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் உதவியுடன் பள்ளியின் உள் மற்றும் வெளி கட்டமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. (தரை டைல்ஸ், சுவர் வண்ணம் உள்வெளி சுவர்களில் தலைவர்கள் படம் அவர்களின் மேற்கோள்கள் திருக்குறள் பாடம் சார்ந்த எழுத்துருக்கள் ஓவியங்கள் போன்றவை) மேலும் பள்ளியின் மண் பரப்பு முழுவதும் கிளாக் போடவும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அமைத்து தரவும் சுவர் சித்திரங்கள் வரைந்து தரவும் இசைந்துள்ளார்கள். மாவட்ட கவுன்சிலர் திரு அயயன் துரை அவர்களின் நிதியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏபிஎல் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக டேபிள் சேர் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.